
காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேருர் மானாம்பதிக்குத் தெற்கே ஏழு கி.மீ.,தொலைவில் உள்ளது ஆலத்தூர்.இக்கிராமத்தில் இடிபாடுகளுக்கு இடையில் ஒரு சிவன் கோயில் மண்முடிக் கிடந்தது.சிவலிங்கத்தின் தலைப் பகுதி மட்டும் ஓரங்குலம் வெளியே தெரிந்தது.இத்தகவலை ஸ்ரீராமலு மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அச்சிறுபாக்கம் கல்வெட்டு ஆய்வாளர் தாமரைக்கண்ணனினுடம் கூறினர். இதையடுத்து ஆலத்தூர் கிராமம் சிவன் கோயிலில் அவர் களப் பணி மேற்கொண்டார்.ஊரார் திருப்பணி செய்ய மண்மேட்டை அகற்றிய போது பதினாறு தாமரைஇதழ்களைக் கொண்ட ஆவுடையார் மீது பெரிய லிங்கம் இருப்பது தெரிய வந்தது,அத்துடன் பூமிக்கடியில் இருந்து பிரம்மா,ஆறுமுகன்,நந்தி,கொற்றவை சிலைகளும் முழுமையாக எடுக்கப்பட்டது.மகிடனின் தலை மீது நிற்கும் கொற்றவை நான்கு கைகளுடனும் பிரயோகச் சக்கரத்துடனும் காட்சி அளிக்கிறாள். சிதிலம் அடைந்திருக்கும் முன் மண்டபத்தில் ராசராசன்,ராசேந்திரன் காலத்திய உருள்துண்கள் காணப்படுகின்றன.லிங்கமும் சிலைகளும் சோழர்கலைப் பாணியுடன் அமைந்துள்ளன.இத்தகவல் தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தினமலர் சென்னை 9.11.2002 சுருக்குக
ஒரு புதிய வகை கல்வெட்டு காணப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் வட்டெழுத்துக்கள் நட்டுவைக்கப்பட்டிருந்த (சுமார் மூன்றரை அடி உயரம் ஒன்றரை அடி அகலம்) ஒரு பலகைக் கல்லில் காணப்பட்டது, அரிய கண்டுபிடிப்பாகும்.அதில் உள்ள தமிழ் எழுத்துக்கள், செங்கற்பட்டு மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படாதவை.இதற்கு முன் செங்கற்பட்டு நகரத்தில் அத்தகைய எழுத்துக்கள் உள்ள கல்,ஏதோ ஒரு தெருவில் இருந்ததாகவும், பின்னர் அது சென்னை மியூசியத்தில் வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
ஒரு பறவைக்கான நடுகல்லில் சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் எழுத்துகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த (கோழிப்) பறவை நடுகல்லின் பின்புறம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. அது தேய்ந்து சிதைந்து போயிருப்பதுடன் பிற்காலத்தியதாகவும் உள்ளது.
தற்போது புதிதாகக் கட்டப்பெற்றுள்ள செங்கழுநீர் விநாயகர் கோயிலுக்கு எதிரில் மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் நட்டு வைக்கப்பட்டிருக்கிறது இந்த நடுகல்.
போலாரம்மன் திருவிழா
இந்த நடுகல்லின் அருகில்,ஆண்டு தோறும் புதிதாக சிறுகுடில் அமைத்து, போலாரம்மன் என்னும் மண் பாவை உருவம் செய்து, பொங்கல் வைத்து, பூசையிட்டுப் படையல் போட்டு நாள் முழுதும் விழாக் கொண்டாடி,அன்றைய மாலையே மண்பாவையை (போலாரம்மனை) ஊர் தூரத்தே உள்ள குளத்திற்கு எடுத்துச் சென்று நீரில் கரைத்து விடுவார்கள்.இதை "போலாரம்மன் திருவிழா" என்று ஊரார் கூறுகின்றனர்.
ஒரு வேளை .."சேவலார் அம்மன்" என்பது , "சேலாரம்மன்" என்று ஆகி நாளடைவில்
"போலாரம்மன்" என்று வந்திருக்குமோ என்பது தெரியவில்லை.போலாரம்மா,போலா ரெட்டியார் என்று சிலர் தங்கள் பெயர்களை வைத்துக் கொள்வதுடன், போலாரம்மனைக் குலதெய்வமாகவும் வழிபடுவதால், இந்த நடுகல்லுக்கும் அந்த இடத்தில் கொண்டாடப்படும் அதே விழாவுக்கும் தொடர்பு இருக்க வழியில்லை என்று எண்ணத்தோன்றுகிறது. செய்தி தெரிந்தவர்க ள்
"போலாரம்மன்" என்பது பற்றி விளக்கமாக ஆராய்வது அவசியம்.பறவைக்காக எடுக்கப்பட்டுள்ள அந்த நடுகல்லில் அழகிய சேவல் ஒன்று வீரம் செரிந்த தோற்றத்துடன் நிற்கிறது. மெலிந்த அழுத்தமான உடலும் , நிமிர்ந்த கொண்டையும், அழகிய அடர்த்தியான வாலும் அதன் தோற்றப் பொலிவை நன்கு வெளிப்படுத்துகின்றன.வலிமையான நீண்ட கால்களை சேர்த்து ஊன்றிக் கொண்டு அது நிற்பதையும், இறக்கையை உடலோடு ஒட்டிக்கொண்டு கழுத்தை நிமிர்த்தியுள்ள வேகத்தையும் , கொண்டையை உயர்த்தி சிலிர்த்துக் கொண்டு, அது கூர்மையாகப் பார்ப்பதையும், உற்று நோக்கினால் (போற்களத்தில் பகைவனை வீழ்த்திவிட்டுப் பெருமிதக் கோலத்தோடு நிற்கும் ஒரு வீரனைப் போல்) அது கண்களிலும் பார்வையிலும் வீரத்துடனும் வெற்றிப்
பெருமிதத்துடனும் நிற்பது நன்கு புலனாகிறது.
பகைக் கோழியை அது வெற்றிக் கொண்டு, அதன் வயிற்றைக் கீறி, அதன் உடலை கொத்தி இறகுகளைத் தன் அலகினால் கொத்து கொத்தாக இழுத்து தலையை ஆட்டுகிறது போலும்.
அந்தச் சேவலின் மேற்புறத்தில் "கீழ்சேரிக் கோழி பொடு கொத்த" என்ற (1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட) தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக பண்டைத் தமிழ் நாட்டில் போரில் பகைவரை வென்று உடல் முழுதும் விழுப்
புண்பட்டு வீரமரணம் எய்திய போர் வீரனுடைய பீடும் பெருமையும் விளங்கும் வண்ணம், அவனுக்கு நடுகல் எடுப்பது வழக்கம். சமீபத்தில் ஜப்பான் நாட்டில் நன்றி விசுவாசம் நிறைந்த ஒரு நாய்க்குச் சிலை அமைத்ததைப் படித்திருக்கிறோம். தினமணி 13.11.1977
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் ,செய்யூர் வட்டம் ,
திரு தாமரைக்கண்ணன், 1976 முதல் தினமணி சுடர் கட்டுரைகள் மூலம் எனக்குஅறிமுகமானவர். அக் கட்டுரைகளில் அவர் ஆய்வுத் திறன் மட்டுமின்றி, மதுராந்தகத்தில் இருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொலம்பாக்கம். இங்கு கல்வெட்டுகள் இருப்பதாக ஊர் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணமூர்த்தி தகவல் கொடுத்தார்.கல்வெட்டு ஆய்வாளர்கள்
புலவர் தாமரைக்கண்ணன்,பண்ருட்டி கவிஞன்தமிழரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் உதவியுடன் பூமியில் புதைந்திருந்த மூன்று கற்கள் வெளியில் எடுக்கப்பட்டன. 12ம் நூற்றாண்டில் (மகா) தேவர் கோயிலுக்குக்கொடை அளித்த செய்தி ஒரு கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது. நிலம் இறையிலியாகக் கொடுக்கப்பட்டதற்கு
நாரண (பட்டர்) ,வெட்சியூருடையான் ஆகிய இருவர் சாட்சியாக இருந்துள்ளமையும் அறிய முடிகின்றது. சேடக்குட்டை என்ற இடத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டில்,"ஸ்வஸ்திஸ்ரீ இத்தந்மம் ஒய்மாநாட்டு உலகமாபுரத்து வியாபாரி கஞ்சனுகுடையான் கடல்நக்கன் இத்தந்மம்" என்ற தொடர் காணப்படுகிறது. திண்டிவனத்தை சேர்ந்த வியாபாரி எதற்கு என்ன நன்கொடை அளித்தார் என்பதுஇக்கல்வெட்டின் மூலம் அறிய முடியவில்லை.
மூன்றாவது கல்வெட்டு ஊரின் கீழ் ராஜவீதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அது திருமால் சக்கரம் பொறிக்கப் பெற்ற ஆழிக்கல்வெட்டு, பெருமாள் கோயிலுக்குஅளிக்கப்படும் நிலக்கொடையின் எல்லைகளில் நடப்படுகின்ற கல்லே ஆழிக்கல்லாகும்.இக்கல்வெட்டு சங்கமவமிசத்து அரசன் வீரப்பிரதாபராயர் ஆட்சியில் (கி.பி.1485)பொறிக்கப்பட்டது. அதில் ‘விண்ணகர்’ என்ற சொல் காணப்படுகின்றது. ஊ ரின் மேல தெருவில் இருந்த திருமால்கோயில், அன்னியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டது.இந்தக் கோயிலுக்குத்தான் கி.பி.1485ல் நிலக்கொடை அளிக்கப்பட்டு, நான்கு எல்லைகளிலும் ஆழிக்கல் நடப்பட்டுள்ளது.கல்வெட்டெழுத்துகள் முழுமையாகப் படிக்க முடியாதபடி தெளிவில்லாமல் இருக்கின்றன.
போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு "நடுகல்" எடுத்து அந்நாளில் வழிபட்டார்கள். வீரனுடைய திருவுருவம் அந்த நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கும்.
வீரர்களை போற்றி வழிபட்டதைப் போலவே,கொற்றவைக்காகவோ அல்லது பொது மக்களின் நன்மைகளுக்காகவோ உயிர் தியாகம் செய்த தியாகிகளையும் ,தமிழர்கள் சிலையில் வடித்துப் போற்றி வழிபட்டு வந்தார்கள்.அச்சிலைகள் சாவான் சிலைகள் என்றும் நவகண்டம் என்றும் பொதுவில் வழங்கப்படுகின்றன.தங்கள் உடம்பில் உள்ள ஒன்பது உறுப்புகளையும் தாங்களாகவே அறுத்துக் கொடுத்துக் கொற்றவையை வழிபட்டதால் "நவகண்டப்பலி" என்று அது கூறப்படுகிறது.
தமிழ் நாட்டில் பல இடங்களில் சாவான் சிலைகளைக் காணலாம்.ஆனால் அச்சிலைகளில் எதன் பொருட்டு ,யார் அந்த பலியைக் கொடுத்தார் என்ற விவரம் பொறிக்கப்பட்டிருப்பது அபூர்வம்.
அருகே காணப்படும் நவகண்டப்பலி வீரனின் சிற்பத்தில் அவன் பெயரும் செய்தியும் பொறிக்கப்பட்டிருப்பதால், இது முக்கியமான சிலையாகக் கருதப்படுகிறது.இதில் உள்ள வீரன்,தன் இடக்கையில் தன் தலை
மயிரைக் கற்றையாக இழுத்துப் பிடித்துக் கொண்டு வலக்கையில் வாள் பிடித்துக் கழுத்தின் பின்
பக்கமாகத் தன் தலையை அறுத்துக் கொள்கிறான்.
அவன் முகத்தில் துன்பத்தின் சாயலே இல்லை.புன்சிரிப்புடன் உயிர்த் தியாகம் புரியும் அவன் முகத்தில் பூரிப்பும் பெருமிதமும் காணப்படுகின்றன.இச்சிலையில் பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. "தைஞ்சு செய்யன் கொழகனுக்கு இராவிலே...கங்க...நம்பி செ குடுத்தார் ராஜேந்திர நாந சோழ தந்ம செட்டியார்கு எழுத்து" என்ற தொடர் காணப்படுகிறது.செய்யன் கொழகன் என்பவனுக்கு இரவிலே என்ன நடந்தது... ராஜேந்திரனான சோழ தன்ம செட்டியார் யார் என்று தெரியவில்லை.
புதுவை வரலாற்றுச் சங்கத் தலைவரும் புதுவை மாவட்ட ஆட்சித் தலைவருமாகிய பி.எல்.சாமி தலைமையில் தாதாபுரம் வட்டாரத்தில் கள ஆய்வுப்பணி நடை பெற்ற போது,இந்தச் சிலை கல்லேரியம்மன் கோயில் அருகே கண்டறியப்பட்டது. அச்சிறுபாக்கம் தாமரைக்கண்ணனும் பாகூர் குப்புசாமியும் இச்சிலை பற்றிய கள ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். 
முதன்முதலாக கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் வெளியட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம் ,மதுராந்தகம் தாலுக்காவில் ஒரத்திக்கு அருகில் உள்ளது சிறுதாமூர்
கிராமம்.இங்கு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில்,புதர் மற்றும் மண்ணுக்குள்
புதைந்துவிட்டது.அதை சீரமைக்கும் பணிகளை ஊர் நாட்டாண்மை பாலகிருஷ்ணன் தலைமையில் மேற்கொண்டனர்.அப்போது மண்ணுக்குள் பழங்கால சிற்பங்களும், கல்வெட்டுக்களும் புதைந்துக்
கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இத்தகவல் அச்சிறுபாக்கம் கல்வெட்டு ஆய்வாளர். தாமரைக்கண்ணன் அவர்கள் தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத் தலைவர் நடன.காசிதநானுக்கு தெரிவித்தார்.
தொன்மை இயல் துறையினர் சிறுதாமூர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் இக்கோயில் கி.பி.1118_1136ம் நூற்றாண்டில் வாழ்ந்த விக்கிரமசோழன் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது.கோயில் சுவர்களில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இங்குள்ள கல்வெட்டுக்களில் விக்கிரமசோழ மன்னன் காலத்திய கல்வெட்டுக்கள் தான் பழமையானதாகத் தெரிகிறது.
இங்குள்ள கல்வெட்டுக்கள் இந்த சிவன் கோயிலை அகத்தீவரமுடைய மகாதேவர் கோயில் என்று குறிப்பிடுகின்றன.சிறுதாமூர் என்னும் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் ஒய்மா நாடாக திருநல்லூர் நாட்டில் அடங்கி இருந்தது.இங்கு காணப்பெறும் ஒரு விஷ்ணு சிற்பம் பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்தது.இக்கோயிலை புதுப்பித்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.